சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பரவலைத் தடுக்கப் பல்வேறு வகையான கட்டுப்பாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வகுத்துள்ளது. அதை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறித்தி வருகிறது.
கரோனா கட்டுப்பாடுகளை மீறிய மண்டபத்திற்கு ஒரு லட்சம் அபராதம்! - சென்னை மாவட்ட செய்திகள்
கரோனா கட்டுப்பாட்டை மீறி அதிகக் கூட்டத்தை கூட்டியதன் காரணமாக, மண்டபத்தின் உரிமையாளரிடமும், திருமண நடத்தியவர்களிடமும் ஒரு லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
அந்த வகையில், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்; அதை மீறுபவர்கள் மீது அபராதமும் விதித்து திருமண மண்டபங்களுக்குச் சீல் வைக்கும் நடைமுறைகளை மாநகராட்சி அலுவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், புரசைவாக்கம் இராஜா அண்ணாமலை ரோட்டிலுள்ள எம்.எஸ்.ஆர் திருமண மண்டபத்தில் 50 நபர்கள் கலந்து கொள்வார்கள் என்றுக்கூறி திருமணத்திற்கு அனுமதி பெற்று, கட்டுபாட்டை மீறி சுமார் 200 நபர்கள் கூட்டமாகப் பங்கேற்றுள்ளனர்.
பின்னர் தகவலறிந்து வருவாய்த் துறை உயர் அலுவலர்கள் ஜஸ்டினா, ஜோசப் தங்கராஜ் தலைமையில் சுமார் 10க்கும் மேற்பட்ட அலுவலர்கள் அங்குச் சென்றுள்ளனர். கட்டுப்பாட்டை மீறி அதிக கூட்டத்தை கூட்டியதன் காரணமாக, மண்டபத்தின் உரிமையாளருக்கு 90 ஆயிரம், திருமண நடத்தியவர்களுக்கு 10 ஆயிரம் என, மொத்தம் 1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. பிறகு மண்டப உரிமையாளரைச் எச்சரித்து சென்றனர்.