தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோழிக்காக ஏற்பட்ட சண்டை; கொலையில் முடிந்த கொடூரம்! - chennai latest crime

சென்னை: ஆவடி அருகே கோழி தகராறில் ஏற்பட்ட மோதலில், ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

chennai latest crime
chennai latest crime

By

Published : Jul 19, 2020, 1:09 AM IST

சென்னை ஆவடி அடுத்த ஆரிக்கபேடு பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (40). இவர் வீட்டில் கோழி வளர்த்து வந்துள்ளார். இவரது வீட்டின் அருகே அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். சசிகுமாரின் கோழிகள் அவ்வப்போது, அன்பழகன் வீட்டு வளாகத்தில் மேய்ந்து வந்துள்ளது.

இதனால் சசிகுமார் அன்பழகன் இடையே விரோதம் ஏற்பட்டது. இச்சமயத்தில் நேற்று(ஜூலை 18) கோழி அன்பழகன் வீட்டிற்குச் சென்றுள்ளது. அப்போது அன்பழகனின் மனைவி கோழியை, கல்லால் அடித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சசிகுமார் அதனைத் தட்டிக்கேட்டுள்ளார்.

கோவையில் பயங்கரம்: காதலிக்க மறுத்த பெண் கொலை!

இதில் சசிகுமார், அன்பழகன் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகியுள்ளது. இதில் சசிகுமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையத்து உடனடியாக சசிகுமார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே சசிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் தகவலறிந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர் அன்பழகனை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோழியால் ஏற்பட்ட இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details