சென்னை: ஆவடி அடுத்த பருத்திப்பட்டு நிரஞ்சன் நகரில் ஆப்டிமா தனியார் குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 118-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு குணசேகரன் மற்றும் ஆவடி பருத்திப்பட்டு தர்மராஜா நகரை சேர்ந்த முத்து என்பவரும் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று (மே 6) காலை குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு இரண்டு பேரும் வந்துள்ளனர்.
அப்போது, ஒரு தொட்டியில் முதலாவதாக முத்து இறங்கியுள்ளார். சிறிது நேரத்தில் முத்துவின் அலறல் சத்தம் கேட்டு குணசேகரன் முத்துவை கைப்பிடித்து மேல தூக்க வந்துள்ளார். ஆனால் விஷ வாயு தாக்கியதால் இருவரும் மயக்கமடைந்தனர். இதனையடுத்து, குடியிருப்புவாசிகள் உடனடியாக ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.