தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் ரூ.18.88 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் - சென்னை பன்னாட்டு விமான நிலையம்

சென்னையில் இலங்கையில் இருந்து உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.18 லட்சத்து 88 ஆயிரம் மதிப்புள்ள 428 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 26, 2022, 10:47 PM IST

சென்னைபன்னாட்டு விமான நிலையத்திற்கு உள்ளாடைக்குள் வைத்து தங்கம் கடத்தி வந்த இளைஞரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். இலங்கையில் இருந்து சென்னை வரும் விமானத்தில் பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளிடையே தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவரிடமிருந்து உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்கத்தின் எடை 428 கிராம் என்றும் ரூ.18 லட்சத்தி 88 ஆயிரம் மதிப்பு உடையது என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த இலங்கை இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறார்.

இதையும் படிங்க: ஆட்டோவில் பாலியல் சீண்டல்... சமூக வலைதளத்தில் பெண் குற்றச்சாட்டு...

ABOUT THE AUTHOR

...view details