சென்னை:மத்தியப்பிரதேச மாநிலத்தைச்சேர்ந்தவர் ராகுல் குமார் பைகா(28). இவர் தனது குடும்பத்துடன் பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் பகுதியில் தங்கி மெட்ரோ ரயில் கட்டுமானப்பணியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சந்திரிகா பைகா என்ற 1 1/2 வயது பெண் குழந்தை உள்ளது.
நேற்று(அக்.15) காலை ராகுல் குமார் வேலைக்குச்சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி மற்றும் குழந்தை மட்டும் இருந்தனர். மாலை வீட்டிற்கு வெளியே இருந்து விட்டு உள்ளே சென்று பார்த்தபோது வாளியில் இருந்த தண்ணீரில் குழந்தையின் முகம் மூழ்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.