தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மெட்ரோ ரயிலில் 50% கட்டணச் சலுகை; தீபாவளி ஸ்பெஷல்! - metro railway ticket 50% discount

சென்னை: ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட அரசு விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயிலில் பயணிகள் பாதி கட்டணம் செலுத்தி பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது.

மெட்ரோ ரயில்

By

Published : Oct 27, 2019, 12:18 PM IST

திங்கள் முதல் வெள்ளி அல்லது சனிக்கிழமை வரை பள்ளி, கல்லூரிக்கு, வேலைக்கு செல்வோர்கள் எண்ணிக்கை அதிகம். அதில் பெருவாரியான மக்கள் மெட்ரோ ரயில் சேவையை தினந்தோறும் பயன்படுத்துவதால் கணிசமான வருவாயை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஈட்டிவருகிறது.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை உள்ளிட்ட நாட்களில் மக்கள் கூட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மிகவும் குறைந்தே காணப்படுகிறது. அதனால் அந்த நாட்களிலும் அதிகமான பயணிகளை பயணம் செய்ய வைக்கும் நோக்கில், பொது விடுமுறை நாட்களில் பாதிக் கட்டணம் செலுத்தினால் போதும் என்ற சிறப்பு சலுகையை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.

இதனால் மெட்ரோவில் ஸ்மார்ட் கார்ட் வைத்திருக்கும் பயணிகளிடம் குறைந்தபட்சமாக 4 ரூபாயிலிருந்து 27 ரூபாய் வரை பயணம் மேற்கொள்ள வசூலிக்கப்படுகிறது. மேலும் ஸ்மார்ட் கார்ட் பயண்படுத்தாவர்களிடம் 5 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை டிக்கெட் கட்டணத்தை செலுத்தி பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் செயல்முறைக்குவருகிறது. இதனை வெகு மக்கள் வரவேற்றுள்ளனர்.

மேலும் படிக்க: எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

ABOUT THE AUTHOR

...view details