தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆம்னி பேருந்தில் அதிக தொகை வசூலித்தால் அழையுங்கள் இந்த எண்ணுக்கு! - omni bus ticket

சென்னை: தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க இலவச தொடர்பு எண்ணை தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.

omni buses banished if getting more money complaint number, omni bus complaint number, ஆம்னி பேருந்து டிக்கெட், omni bus ticket  omni bus high fare report
omni bus high fare report

By

Published : Jan 11, 2020, 11:55 PM IST

பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவர, பல்வேறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தனியார் ஆம்னி பேருந்துகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் பொதுமக்களும் பயணிகளும் புகார் தெரிவிக்க அரசின் போக்குவரத்துத் துறையின் கட்டணமில்லாத எண்: 18004256151 தொடர்புகொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கோயம்பேட்டில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்போகிறீர்கள் என்றும், பயணம் செய்யும் இடத்திலிருந்து பயணம் முடியும் இடத்தில் மட்டுமே தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டும் என்கிற விதிகளிருந்தும், அவை பின்பற்றப்படாதது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

உங்கள் வாக்கு யாருக்கு? - பெண்ணின் காந்தக் குரலால் திக்குமுக்காடும் டெல்லி!

அதற்கு பதிலளித்து பேசிய தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மக்கள் நலனை கருத்திற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற அவர், தற்போது ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் புகார் தெரிவிக்க இலவச எண் போன்ற நடவடிக்கைகளைப் பயணிகள் வரவேற்றிருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details