தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஒமைக்ரான் அச்சுறுத்தல்; விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை - Omicron

தென் ஆப்பிரிக்கா உள்பட 12 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வரும் பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை

Air port
Air port

By

Published : Nov 30, 2021, 9:39 PM IST

சென்னை : தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக தென் ஆப்பிரிக்கா உள்பட 12 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வரும் பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், நியூசிலாந்து, மொரிசியஸ், வங்க தேசம் உள்பட 12 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வரும் பயணிகளுக்கு சர்வதேச விமான நிலையங்களில் கண்டிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும், நெகட்டிவ் என்று முடிவு வந்தால் வீட்டுக்கு சென்று ஏழு நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒமைக்ரான் அச்சுறுத்தல்
பயணிகள் யாருக்காவது கரோனா வைரஸ் கண்டறியப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். மாதிரிகள் முழு மரபணு சோதனைக்கு உள்படுத்தப்பட்டு கரோனா வைரஸில் உருமாற்றம் உள்ளதா எனக் கண்டறியபடும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தமிழ்நாட்டிற்கு வந்த 14 நாள்களுக்குள் கரோனா அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையம் அல்லது 104 இலவச மருத்துவ உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

சுற்றறிக்கை
மேலும் நாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
அந்த அடிப்படையில், “இன்றிரவு (நவ.30) சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வருகைப் பகுதியில் வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகளுக்கு புதிய வகை ஒமைக்ரான் உருமாறிய கரோனா தொற்று உள்ளதா என சோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆர்டிபிசிஆர் சோதனை
செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள், விமான நிலைய அலுவலர்கள் ஒன்றிணைந்து பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தியுள்ளனர். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, போடுவான் ஹாங்காங், சீனா, இஸ்ரேல், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், பிரேசில், வங்க தேசம், மொரிசியசில் ஆகிய 12 நாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகள் அனைவரும் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
இவர்களுக்கு கண்டிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் முடிவு வந்தவர்கள் வீடுகளுக்கு செல்லும். ஆனால் வீட்டில் ஏழு நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், தொற்று இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்.
தொற்று பயணிகள் யாருக்காவது உறுதி செய்யப்பட்டால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்கள் சர்வதேச விமான நிலையத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : ஒமைக்ரான் வைரஸ் தொற்றை தமிழ்நாட்டிலேயே கண்டறியலாம்

ABOUT THE AUTHOR

...view details