தென் ஆப்பிரிக்கா நாட்டில் உருவாகியுள்ள உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தற்போது சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், பிரேசில், வங்கதேசம், போஸ்வானா, மொரீசியஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது.
இதனால் தமிழ்நாடு அரசு ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுப்பதில் போா்க்கால அடிப்படையில் அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தென் ஆப்பிரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல், சிங்கப்பூா் உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து நேரடி விமானங்களிலும், விமானங்கள் மாறி மாற்று விமானங்களிலும் தமிழ்நாட்டிற்கு வருகைபுரிகின்றனர்.
சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வருபவா்களை அந்தந்த விமான நிலையங்களிலேயே நிறுத்திவைத்து, ஆர்டி-பிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியிலிருந்து ஒமைக்ரான் பரவிவரும் நாடுகளிலிருந்து சென்னை வந்த 350-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் யாருக்கும் தொற்று பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.