சென்னை:தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதுவகை ஒமைக்ரான் தொற்று போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் அதிவேகமாக பரவிவருகிறது. ஒரே வாரத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவியதால் மக்கள் பீதியில் உள்ளனர். உலக சுகாதார அமைப்பு உருமாற்றம் அடைந்த புதிய கெரோனா வைரஸான பி.1.1.529 என்ற ஒமைக்ரான், மற்ற வேரியண்டுகளைவிட அதிக ஆபத்து கொண்டது என்று அறிவித்துள்ளது.
சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஒமைக்ரான் தொற்று பரவல் இந்தியாவில் இல்லை என்றாலும், மக்கள் அனைவரும் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.