தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உதவித்தொகை கேட்ட முதியவர், உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர்! - Chief Minister

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் சேவை' மையத்தைத் தொடர்புகொண்டு முதியோர் உதவித்தொகை கேட்ட ஈரோட்டைச்சேர்ந்த முதியவருக்கு, உடனடியாக முதலமைச்சர் முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

உதவி தொகை கேட்ட முதியவர், உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர்
உதவி தொகை கேட்ட முதியவர், உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர்

By

Published : Jul 27, 2022, 3:10 PM IST

ஈரோடு: சென்னை சோழிங்கநல்லூரில் செயல்படும் ’உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் சேவை’ மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு, சேவை மையத்திற்கும் வரும் அழைப்புகளை எடுத்து அவர்களின் கோரிக்கைகளை சமீபத்தில் நிறைவேற்றினார்.

இந்நிலையில் ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சையா. முதியோர் உதவித்தொகைக்காக விண்ணப்பித்து காத்திருந்த இவர், 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் சேவை' மையத்தைத் தொடர்பு கொண்டார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 63 வயதான பிச்சையாவின் கோரிக்கையைக் கேட்டறிந்தார்.

பின்னர் உடனடியாக முதலமைச்சர், பிச்சையாவின் கோரிக்கையை ஏற்று அவருக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். இதனைக்கேட்டு பிச்சையா மிகுந்த உற்சாகமடைந்தார்.

இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட் - வீரர்களுக்கு விருந்தளிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details