தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சொத்துக்காக உணவளிக்காத மகன்கள் - அலைக்கழிக்கும் போலீசார், கலங்கும் மூதாட்டி! - மூதாட்டியை கொடுமைபடுத்தும் மகன்கள்

சென்னை: சொத்துக்காக உணவளிக்காமல் கொடுமை படுத்தும் மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கோரி புகார்கள் அளித்து 2 ஆண்டுகள் ஆகியும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மூதாட்டி காவல் ஆணையரை நாடியுள்ளார்.

old lady complaint against her sons
old lady complaint against her sons

By

Published : Oct 10, 2020, 2:10 AM IST

சென்னை கொசப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி பேபியம்மாள்(75). அவரது கணவர் பார்த்தசாரதி சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். பேபியம்மாளுக்கு 5 மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர்.

அவருக்குச் சொந்தமாக கொசப்பேட்டை மார்க்கெட் பகுதியில் 1 கிரவுண்ட் வீடு உள்ளது. அந்த வீட்டில் பேபியம்மாள் தனது மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.

பேபியம்மாள் பெயரில் வீடு உள்ளதால் அவரது மகன்கள் வீட்டை தங்களது பெயரில் எழுதி கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். அவருக்கு உணவு கொடுக்காமல் வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

மூதாட்டி பேபியம்மாள்

அதனால் அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டேரி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது அவர் முதியவர் உதவி தொகை ஆயிரம் ரூபாயை மட்டுமே வைத்து கொண்டு அவரது வீட்டின் மாடியில் தனியாகயிருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் காவல் ஆணையரிடம் முறையிட சென்றார்.

ஆனால் காவலர்கள் புகார் அளிக்க உள்ளே அனுமதிக்காமல் வெளியே உட்கார வைத்தனர். அதையடுத்து அவர் ரோந்து வாகனத்தின் மூலம் வேப்பேரி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதையும் படிங்க:மூதாட்டி கழுத்தறுத்து கொலை - காவல்துறை விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details