சென்னை: திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமாரி (69). இவர், வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக மூன்றாவது கேட் அருகே பதாகை ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கந்து வட்டியில் இருந்து தன்னை காப்பாற்றி தனது மனையை மீட்டு தரவேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
ஏமாற்றம்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சாந்தகுமாரி, “2011ஆம் ஆண்டு உமாபதி என்பவரிடம் தனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, மாத வட்டி செலுத்தி வந்தேன். எனது மகள் 2016ஆம் ஆண்டு இறந்த பிறகு வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வட்டித் தொகை மட்டுமே செலுத்த வேண்டும் என உமாபதி தெரிவித்து அதற்கும் பணம் கொடுத்ததுபோல பத்திரப்பதிவு செய்து தன்னை ஏமாற்றி கையொப்பம் பெற்றுக்கொண்டார். 2017ஆம் ஆண்டு மொத்தம் 5 லட்சம் கொடுத்தால் பத்திரப்பதிவை ரத்து செய்வதாக உமாபதி கூறினார்.