தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தாம்பரம் மாநகராட்சியில் வெள்ள பாதிப்புகளைத்தடுக்க அலுவலர்கள் - மாநகராட்சி ஆணையர் - மழை நீர்

தாம்பரம் மாநகராட்சியில் மழை நீர் தேங்கும் 28 இடங்களிலும் அலுவலர்கள் தயார் நிலையில் இருப்பதாக, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்

தாம்பரம் மாநகராட்சியில் வெள்ள பாதிப்புகளை தடுக்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்
தாம்பரம் மாநகராட்சியில் வெள்ள பாதிப்புகளை தடுக்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்

By

Published : Oct 7, 2022, 6:33 PM IST

தாம்பரம் மாகராட்சியில் மழை முன்னெச்சரிக்கை குறித்து மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறுகையில், 'தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் வடகிழக்குப்பருவமழையை முன்னிட்டு மழை நீர் தேங்கும் 28 இடங்களில் குறிப்பாக செம்பாக்கம் திருமலை நகர், சிட்லப்பாக்கம் கட்டபொம்மன் நகர், பம்மல், பெருங்களத்தூர் ரோஜா தோட்டம், இரும்புலியூர் வாணியங்குளம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் மழை நீர் தேங்கினால் உடனடியாக கால்வாய் வெட்டி விடுவதும், மோட்டார் வைத்து மழை நீரை இறைக்கும் பணியில் ஈடுபடத்தயாராக இருக்கிறார்கள். மேலும் 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு ஒருங்கிணைந்த வடிகால் பணியை மேற்கொண்டு வருகிறது, தாம்பரம் மாநகராட்சி’ என்றார்.

தாம்பரம் மாநகராட்சி அதனைச்சுற்றியுள்ள ஊராட்சிப்பகுதிகளிலும், அதிக மழை நீர் தேங்கி வந்த நிலையில் மழை நீர் வடிகால்வாய்கள் முழுமையாக கட்டப்பட்டதால் சில இடங்களில் மழை நீர் தேங்காமல் வடிந்து விடுகிறது.

தாம்பரம் மாநகராட்சியில் வெள்ள பாதிப்புகளைத்தடுக்க அலுவலர்கள் - மாநகராட்சி ஆணையர்

கண்டறியப்பட்டுள்ள 28 இடங்கள் தாழ்வான பகுதி என்பதால் அதற்கான பணிகளையும் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தாம்பரம் மாநகராட்சி பகுதி வெள்ளத்தடுப்பு சிறப்பு அலுவலராக ஜான் லூயிஸ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மழை நீர் தேங்கும் பகுதிகளில் நிரந்தரமாக தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: மனைவி முன்னால் மற்ற நடிகையுடன் நெருக்கம் காட்டிய அர்ணவ்.. தட்டிக் கேட்ட திவ்யாவின் கருவில் உதை? பரபரப்பு புகார்

ABOUT THE AUTHOR

...view details