தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 25, 2021, 6:08 AM IST

ETV Bharat / city

நல்ல நேரம் யாருக்கு🕕 - அக்டோபர் 25

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

PUBLISH AT 6 AM
PUBLISH AT 6 AM

மேஷம்

நீங்கள் மிகவும் கருணைமிக்கவராகவும், அக்கறை உள்ளவராகவும் இருப்பீர்கள். நீங்கள் தாராள மனத்துடன் செயல்பட்டு, உங்களிடம் இருப்பதை வாரி வழங்குவீர்கள். வருங்காலத்தில், இவை அனைத்தும் ஈடுகட்டப்படும். நீங்கள் பணியில், வேலையுடன் கூடவே, சகப் பணியாளர்களுடன், வேடிக்கையாகப் பேசி மகிழ்வித்து, உங்கள் குடும்பத்தினரைப்போல் நடத்துவீர்கள்.

ரிஷபம்

நிதிப் பிரச்சினை உங்களைத் தொடர்ந்து வாட்டிக் கொண்டிருக்கும். சிறிய அளவிலான செலவுகளை, நீங்கள் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும். நீங்கள் பிற வகையிலிருந்து, வருமானம் ஈட்டக்கூடும். நீங்கள் சுதந்திரமாகச் செயல்பட்டால், பணியிடத்தில் திறமையாகச் செயல்பட்டு, சிறந்த பலன்களைக் கொடுக்க முடியும்.

மிதுனம்

இன்றைய நாளில், நீங்கள் சுத்தம் - சுகாதாரத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வீட்டில் உள்ள பொருள்களை ஒழுங்காக அடுக்கிவைத்து, கிருமிநாசினிகளைத் தெளித்து சுத்தப்படுத்தலாம். உங்களது அன்பான அணுகுமுறையின் மூலம், பதற்றத்தை நீங்கள் தணிப்பீர்கள்.

கடகம்

சின்ன சின்ன நோய்கள் உங்களைத் தாக்கும் வாய்ப்புள்ளது. மிகவும் குளிரான உணவுப் பதார்த்தங்களைச் சாப்பிட வேண்டாம். மற்றவர்களின் பிரச்சினையில் உங்களது பங்களிப்பைச் செலுத்தி அவர்களுக்கு உதவுவீர்கள். மேலும், புதிதாக ஒன்றைத் தொடங்க முயற்சிப்பீர்கள்.

சிம்மம்

நீங்கள் உங்கள் வருமானத்திற்கு ஏற்பச் செலவுகளைச் சமப்படுத்தினால் நல்லது. பங்குகளில் முதலீடு செய்ய இது சிறந்த நேரம். உங்கள் கடன்கள் தீர்த்துவைக்கப்படும். நிறைவேற்றப்படாமல் இருந்த ஒரு பணி அல்லது ஒரு திட்டம் இப்போது நிறைவுபெறும் வாய்ப்பு உள்ளது.

கன்னி

நீங்கள் உடற்பயிற்சி, சிறந்த உணவுப்பழக்கத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அதைக் கடைபிடிக்க விரும்புவீர்கள். இருப்பினும், நீங்கள் சில ருசியான உணவை இன்று சுவைக்க விரும்பலாம். இன்றைய நாள், வாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருப்பதை நீங்கள் காணலாம். ஒரு ஆரோக்கியமான உடல் நலன், எதிர்காலத்தைப் பற்றி பாதுகாப்பான உணர்வைத் தரும்.

துலாம்

உங்கள் வீட்டை அலங்கரிக்கவும் புதுப்பிக்கவும் உங்கள் படைப்பு, கலை திறமைகளைப் பயன்படுத்துவீர்கள். உங்கள் வீட்டின் அலங்காரத்தை அனைவரும் பாராட்டுவர், அப்போது உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது. நீங்கள் சரியான மனநிலையில் இல்லாதிருந்தால் மாலை முழுவதையும் தனியாகச் செலவிடும் சூழல் உள்ளது.

விருச்சிகம்

விளையாட்டு வீரர்கள், தங்களது முழு ஆற்றலை வெளிப்படுத்துவார்கள். பொறியாளர்கள் தங்களது புதிய வியாபார முயற்சிகளைத் தொடங்கும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். சமூக அங்கீகாரம், கவுரவம் ஆகியவை கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

தனுசு

இன்றைய நாள் சவால்களுடன் தொடங்கும். தனிமைப்படுத்தப்பட்டுள்ள நீங்கள், உங்கள் சொந்த பிரச்சினைகளை உங்களது முயற்சியின் மூலம் தீர்க்க வேண்டும். உங்கள் திறமையும் ஆற்றலும் இன்று பல வகைகளில் சோதிக்கப்படும். இருப்பினும், எல்லாமே நன்மையில் முடிவடையும். சுய உதவி குறித்த நூலை படிப்பது, வரும் நாள்களில் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

மகரம்

நீங்கள் யாரையும் எளிதாக நம்ப மாட்டீர்கள், அதனாலேயே நீங்கள் கூட்டு வியாபாரத்தில் ஈடுபட மிகுந்த தயக்கம் காட்டுவீர்கள். இன்று ஒரு வித்தியாசமான நாள்; நீங்கள் உங்கள் வேலையில் விதிவிலக்காக நன்கு செயல்பட்டு, இறுதியில் அனைவரின் புகழைப் பெறுவீர்கள். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், இன்று எதிர்காலத்திற்கான பாதையைத் தேர்ந்தெடுப்பீர்கள்.

கும்பம்

இன்று, நீங்கள் அலுவலகத்தில் அல்லது உங்கள் வீட்டில் சுத்தம் செய்ய விரும்புவீர்கள். உங்கள் சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருந்தால், உங்கள் உற்சாகம் இரு மடங்காகும். இரு இடங்களிலும் அதற்கு உங்களுக்குப் பாராட்டு கிடைக்கும். இன்று, உங்கள் காதல் துணையுடன் ஒரு இரவு விருந்திற்குச் சென்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மீனம்

உங்கள் சிறந்த தாராள மனப்பான்மை காரணமாக நீங்கள் எல்லோரிடத்திலும் சிநேகமாய் இருப்பீர்கள். உயிர் காப்பான் தோழன் என்ற பழமொழி உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும். உங்களிடமிருந்து தொலைதூரத்தில் வசிக்கும் மக்கள் உங்கள் ஆலோசனையை நாடுவார்கள். உங்களது திறமையைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு உதவ நீங்கள் முயற்சி செய்வீர்கள்.

ABOUT THE AUTHOR

...view details