சென்னை:விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் டெல்லி கோபி, பாஜகவின் முன்னாள் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி தலைவராக பதவி வகித்தவர். இவர், ஆன்லைன் லோன் ஆப் மூலமாக சில கடன்கள் பெற்று அதை கட்டி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த (அக்.4) ஆம் தேதி deck loan, slog loan என்ற ஆன்லைன் லோன் ஆப் மூலமாக ஐந்தாயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
அந்த கடனுடைய தேதி முடிவடைந்து காலதாமதம் ஆகியுள்ளது. இந்நிலையில், அவரது செல்போனிற்கு பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவருடன் கோபியின் புகைப்படத்தை இணைத்து ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.