சென்னை: இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்நல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றுதான். இந்தத் தேர்தலில் ஆளும்கட்சி செயற்கையான வெற்றியை பெற்று இருக்கிறது. இந்தத் தேர்தல் நூறு விழுக்காடு சுதந்திராகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றிருந்தால் அதிமுக மகத்தான வெற்றியை பெற்றிருக்கும்.
அவ்வாறு நடைபெறவில்லை என்பது தூதிர்ஷ்டவசமானது. நடந்து முடிந்த தேர்தல் என்பது முழுமையான மக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு அல்ல, 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்ற அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப மக்களின் தீர்ப்பிற்கு அதிமுக தலை வணங்குகிறது.
இந்தத் தருணத்தில் அனைத்திந்திய அண்ணர் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் தோழமை கட்சிகளுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு எனது நன்றியினை தெரிவிந்துக் கொள்கிறேன். அதிமுக இதற்கு முன்பு கூட பல தோல்விகளை சந்தித்தாலும், அவற்றிலிருந்து மீண்டு வந்து மகத்தான வெற்றிகளை படைத்து இருக்கிறது.