பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். அளவிற்கு அதிகமாக அவர்கள் விதித்த வரிகளை கட்ட மறுத்த கட்டபொம்மன், ஆங்கிலேயர்களுடன் வீரச்சமர் புரிந்து, கடைசியில் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டு ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பின்னர், கடந்த 1799 ஆம் ஆண்டு இதே நாளில், ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் என்பவரால் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டு, வீரபாண்டிய கட்டபொம்மன் வீரமரணம் அடைந்தார். அவரது 221 ஆவது நினைவு நாளான இன்று(அக்.16) பல்வேறு அரசியல் இயக்கத்தினரும், கட்டபொம்மனின் நினைவைப் போற்றி வருகின்றனர்.