தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் நன்றி - O Panneerselvam twitter post

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்  ட்வீட்
ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்

By

Published : May 30, 2021, 3:02 PM IST

கரோனா பாதிப்பால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளை தமிழ்நாடு அரசு தனது அரசு காப்பகங்களில் தங்கவைக்கும் என்றும், அந்த குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான செலவை அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

மேலும் அந்த அறிவிப்பில், கரோனாவால் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளின் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் வங்கி வைப்பு செலுத்தப்படும் என்றும், அந்த குழந்தைகளுக்கு 18 வயதாகும் போது அந்த பணம் வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்

இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், "கரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மே 28ஆம் தேதி அறிக்கை வாயிலாக முதலமைச்சரை கேட்டுக் கொண்டிருந்தேன்.

எனது வேண்டுகோளை ஏற்று அதற்கான அறிவிப்பினை மே 29ஆம் தேதி வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details