கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஊட்டச்சத்து அதிகம் நிரம்பிய உணவுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அவை என்னவென்று இப்போது பார்க்கலாம்.
- காலை 7 மணிக்கு - இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கொடுக்கின்றனர்.
- காலை 8.30 மணிக்கு - 2 இட்லி, சாம்பார், வெங்காயச் சட்னி, சம்பா ரவை கோதுமை உப்புமா அல்லது கிச்சடி, 2 வேகவைத்த முட்டை மற்றும் பால் வழங்கப்படுகின்றன.
- காலை 10.30 மணிக்கு - சாத்துக்குடி ஜூஸ் கொடுக்கப்படுகிறது.
- மதியம் 12 மணிக்ககு - வெள்ளரிக்காய் சாலட் மற்றும் இஞ்சியை தோலுடன் கூடிய எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டித் தருகின்றனர்.
- மதியம் 1.30 மணிக்கு - 2 சப்பாத்தியுடன் புதினா சாதம் அல்லது வெஜிடபிள் சாதம், வேகவைத்த காய்கறிகள், கீரை, மிளகு ரசம், உடைத்த கடலை வழங்கப்படுகிறது.
- மாலை 3 மணிக்ககு - மிளகு, மஞ்சளுடன் உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்த தண்ணீரும் வழங்கப்படுகிறது.
- மாலை 5 மணிக்கு - பருப்பு சூப், சுண்டல் கொடுக்கின்றனர்.
- இரவு 7 மணிக்கு - 2 சப்பாத்தி, சம்பா ரவை கோதுமை உப்புமா அல்லது கிச்சடி, வெஜிடபிள் குருமா, வெங்காயச் சட்னி, பால் கொடுக்கப்படுகின்றன.
- இரவு 9 மணிக்கு - இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டித் தருகின்றனர்.
- இரவு 11 மணிக்கு - மிளகு மற்றும் மஞ்சளுடன் உப்பு சேர்த்து கொதிக்கவைத்த தண்ணீர் வழங்கப்படுகிறது.