கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு வீட்டிலுள்ளவர்கள் உண்ண வேண்டிய உணவு வகைகள் குறித்து அப்போலோ மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி கூறியதாவது, ” தற்போது ஊரடங்கினால் நாம் அனைவரும் வீட்டிற்குள் இருக்கிறோம். இவ்வாறான நேரத்தில் நாம் நம்மை எவ்வாறு பேணிக் கொள்வது என்பது குறித்து சில டிப்ஸ்களை தருகிறேன்.
- நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் தேவையானவற்றைச் செய்ய வேண்டும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை ஒரே இரவில் அதிகரிக்க முடியாது. இதற்கு சத்தான உணவு உட்கொள்ளுதல், நல்ல உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகியவை அவசியமாகும்.
- சத்தான உணவை தேவையான அளவில் உண்ண வேண்டும். வீட்டில் இருக்கிறோம் என்பதற்காக அளவுக்கு அதிகமாக உண்டு உடல் எடையை அதிகரிக்கக் கூடாது.
- கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்கள் மற்றும் எண்ணையில் பொறித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஊரடங்கு காலத்தில் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி தரும் டிப்ஸ்!
- பழம், காய்கறிகளை அதிக அளவில் சாப்பிடுவது, தண்ணீரை அதிக அளவில் குடிக்க வேண்டும்.
- நமது வீட்டுச் சமையலறையில் உள்ள மிளகு, சீரகம், மஞ்சள் தூள், பூண்டு போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.