தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’சத்துணவுப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்’

சென்னை: சத்துணவுப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By

Published : May 29, 2021, 9:35 PM IST

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நூர்ஜஹான், மாநிலத் தலைவர் சுந்தரம்மாள் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "கடந்த 2020ஆம் ஆண்டில் கரோனா தொற்றுக் காலத்தில் நோயாளிகள் கணக்கெடுப்பு பணி, செக்போஸ்ட் பணி, இதரப் பணிகளுக்கு ஊழியர்கள் ஒரு சில மாவட்டங்களில் எந்தவித பாதுகாப்புமின்றி கட்டாயமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து வசதி இல்லாத சூழ்நிலையில் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு, திருவண்ணாமலை, நாகப்பட்டினம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொது மக்களுக்கு உணவு சமைத்து வழங்கினர். அதில் திருவண்ணாமலை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு, அமைப்பாளர்கள் தங்கள் சொந்தப் பணத்தைக் கொண்டு உணவு தயாரித்தனர். இத்தொகை அவர்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை

மேலும் தற்போது திருச்சி, ஈரோடு, திருப்பூர், கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், திருவள்ளுர் உள்ளிடட மாவட்டங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு எந்தவித பாதுகாப்பும், அதற்கான உபகரணமும் வழங்கப்டவில்லை. வீடுவீடாகச் சென்று கரோனா தொற்று தடுப்புப் பணிகளில் அவர்களை கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதும், பெண் ஊழியர்கள் மிகவும் பயப்படுகின்ற சூழ்நிலையிலும் செயல்பட்டு வருவதால், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை எங்களுக்கும் செய்து கொடுத்தால் மாவட்ட நிர்வாகம் வழங்கும் பணிகளில் நாங்கள் ஈடுபட வாய்ப்புள்ளது.

கரோனா தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது போல் சத்துணவு ஊழியர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்து ஊக்கத் தொகை வழங்க வேண்டுகிறோம். தற்போது தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றின் காரணமாக முழுமையான ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் பள்ளிகளில் சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு முட்டைகள் வழங்க அனைத்து மாவட்டங்களிலும் முட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஊரடங்கின்போது பள்ளி மாணவர்களுக்கு முட்டைகள் வழங்கினால் நோய்த்தொற்று அதிகமாக பரவுதற்கு வாய்ப்பு இருப்பதால் ஊரடங்கு முடிந்த பின் பள்ளி சத்துணவு மையங்களுக்கு முட்டைகள் வழங்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாநில மையத்தின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்" எனக் கோரியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details