சென்னை:சென்னையில் உள்ள ஒரு மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் சார்ட் ஹேர் ஸ்டைலில் முடி வெட்டியுள்ளார். அந்த பெண் உதவி ஆய்வாளர் நேற்று ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டிசர்ட் உடையில் தனது தோழியுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்குச் சாப்பிடச் சென்றார்.
சாப்பிட்ட பின்பு நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை அருகே உள்ள தள்ளுவண்டி கடையில் மோர் குடித்துள்ளார். அப்போது அங்கு மதுபோதையில் நின்றிருந்த 3 வாலிபர்கள், பின்புறமாகத் திரும்பி மோர் குடித்து வந்த பெண் உதவி ஆய்வாளர் தோளின் மீது கை போட்டு, இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது எனக் கூறியுள்ளனர். உடனே திரும்பித் தான் பெண் எனவும், காவல் உதவி ஆய்வாளராக இருந்து வருவதாகவும் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு பெண் என நம்புவதற்கான ஒரு தகுதியும் உன்னிடம் இல்லை எனவும் உதவி ஆய்வாளர் என எப்படி நம்புவது என கிண்டலடித்து உள்ளனர். மேலும் பெண் உதவி ஆய்வாளரின் உடலமைப்பை ஆபாசமாக வர்ணித்தும், கேலி கிண்டலும் செய்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் உதவி ஆய்வாளர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தார்.