தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் ஏற்பட்ட காரணத்தினால் காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கன்னியாகுமாரி, நீலகிரி, கோயம்பத்தூர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு - light to moderate rain in TN
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேசான மழைக்கு வாய்ப்பு
சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.