தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நீட் தேர்வு எழுத 7,726 அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பம் - number of Govt students applied for neet

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்காக அரசு பள்ளிகளிலிருந்து கடந்த 8ஆம் தேதி வரை 7,726 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பம்
நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பம்

By

Published : Aug 10, 2021, 3:02 PM IST

தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வினை எழுத கடந்த 8ஆம் தேதி வரை 7 ஆயிரத்து 726 அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களில் ஆதிதிராவிடர் பிரிவில் 1,161 மாணவர்கள், ஆதிதிராவிடர் அருந்ததியர் பிரிவில் 110 மாணவர்கள், பழங்குடியினர் பிரிவில் 83 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே (ஆக.10) கடைசி நாளாகும்.
நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் 7.5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில் இத்திட்டத்தின் மூலம் கடந்தாண்டு 435 மாணவர்கள் எம்.பி.பிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்ந்தனர்.

ஆனால் நடப்புக்கல்வி ஆண்டில் இந்த இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு தகுதிப் பெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மொத்தமாக ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த 3,690 மாணவர்கள், அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த 244 மாணவர்கள், பழங்குடியின மாணவர்கள் 178 பேர் மட்டுமே பதிவு செய்திருக்கின்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்களில் ஆதிதிராவிடர் அருந்ததியர் பிரிவிலிருந்து 16 மாவட்டங்களில் யாரும் விண்ணப்பிக்கவில்லை. அதுபோல 19 மாவட்டங்களில் பழங்குடியினர் பிரிவில் இருந்து ஒரு மாணவரும் விண்ணப்பிக்கவில்லை.
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தனியாக பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் ஆதிதிராவிடர் அருந்ததியர், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்காமல் உள்ளனர்.

இவர்களின் பொருளாதார வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு, பயனற்ற நிலைக்கு செல்லுமோ என்ற அச்சம் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க:புதுக்கோட்டை சிறுவன் வழக்கு: சிபிசிஐடிக்கு விவரங்களை வழங்க ஆதார் ஆணையத்திற்கு உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details