தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தென்சென்னை தொகுதியில் பவர்ஸ்டார் சீனிவாசன் வேட்புமனு தாக்கல்! - srinivasan

சென்னை: தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

powerstar

By

Published : Mar 26, 2019, 7:06 PM IST

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முக்கிய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் என ஏராளமனோர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவந்தனர். இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பலர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

அந்த வகையில் பிரபல நடிகரும், அக்குபஞ்சர் மருத்துவருமான பவர் ஸ்டார் சீனிவாசன் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் தென் சென்னை தொகுதியின் வேட்பாளராக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்களுடைய இந்திய குடியரசு கட்சியின் அகில இந்திய தலைவர் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தலைமையில் மாநில தலைவர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.

மக்களை நம்பி நிற்கிறேன். கண்டிப்பாக ஜெயிப்பேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. பரப்புரைக்கு மத்திய அமைச்சர் வருகிறார். எதிரி என்று எங்களுக்கு யாருமில்லை. எல்லோருமே நண்ணபர்கள்தான்.

தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும். முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் விழிப்புணர்வை மையப்படுத்தி எங்களுடைய பரப்புரை அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details