தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தரமணி, ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப்பூங்கா பேராசிரியர்.அசோக் ஜுன்ஜுன்வாலா சந்தித்து, ஐஐடி வளாகத்தில் ஆராய்ச்சிப் பூங்கா அமைக்க அரசு அளித்த நிலத்திற்கான குத்தகை தொகையாக, 1 கோடியே 25 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
தொடர்ந்து, மற்றொரு நிகழ்வில் முதலமைச்சரை, நீர்வளப்பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் 2019-20 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாநிலமாக மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தால் தமிழ்நாடு தேர்வு பெற்று, தேசிய நீர் விருது பெற்றதையொட்டி, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.