புதுச்சேரியில் 11 மணி நிலவரப்படி 20.07 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் என்.ஆர். ரங்கசாமி எளிமையான முறையில் இருசக்கர வாகனத்தில் திலாசுப்பேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்தார். பின்னர் வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.
புதுச்சேரியில் என்.ஆர். ரங்கசாமி வாக்களிப்பு! - NR Congress leader Rangasamy votes
புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி திலாசுபேட்டையில் உள்ள அரசுப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

NR Congress leader Rangasamy votes