தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் குறைந்துவரும் கரோனா: இன்று 1,912 பேருக்கு உறுதி! - நவம்பர் 14 கரோனா நிலவரம்

tamilnadu corona
tamilnadu corona

By

Published : Nov 14, 2020, 6:22 PM IST

Updated : Nov 14, 2020, 8:56 PM IST

18:16 November 14

தமிழ்நாட்டில் இன்று(நவ.14) ஆயிரத்து 912 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இரண்டாயிரத்து 494 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 12 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,912 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 509 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 12 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். 

இன்று 2,494 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கடந்த சில வாரங்களாக கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து குணமடைவோரின் எண்ணிக்கை உயர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 13 லட்சத்தைக் கடந்த கரோனா உயிரிழப்பு

Last Updated : Nov 14, 2020, 8:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details