தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு வரும் 18ஆம் தேதி கலந்தாய்வு!

தமிழ்நாட்டில் முதல் முறையாக இந்த கல்வியாண்டில், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கான மருத்துவக் கலந்தாய்வு வரும் 18ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு   கலந்தாய்வு
7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு கலந்தாய்வு

By

Published : Nov 16, 2020, 10:15 PM IST

Updated : Nov 16, 2020, 10:25 PM IST

சென்னை:தமிழ்நாட்டில், நடப்பு கல்வியாண்டில் மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (நவ.16) வெளியிட்டார். அப்போது அவர், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டிற்காக, 972 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 951 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., படிப்பில் 313 இடங்களும், பல் மருத்துவ படிப்பில் 92 இடங்களும் என ஒட்டுமொத்தமாக 405 இடங்கள் கிடைக்கும் என தெரிவித்தார்.

இந்த நிலையில், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் செல்வராஜன் வெளியிட்டுள்ள கலந்தாய்வு அட்டவணையில், எம்பிபிஎஸ், பல் மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு அரசு ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு நடைபெறும் தேதியை அறிவித்துள்ளார்.

அதன்படி, வரும் 18ஆம் தேதி காலை 9 மணிக்கு தரவரிசைப் பட்டியலில், 1ஆம் இடம் முதல் 151 ஆவது இடம்பிடித்த, 249 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து 11 மணிக்கு தரவரிசைப் பட்டியலில் 152 முதல் 267 இடம்பிடித்த, 190 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
வரும் 19ஆம் தேதி, காலை 9 மணிக்கு தரவரிசைப் பட்டியலில் 268 முதல் 423 வரை இடம்பிடித்த மாணவர்கள், கட்-ஆப் மதிப்பெண்கள் 158 வரை பெற்றவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து 11 மணிக்கு, தரவரிசைப் பட்டியில் 527 முதல் 633 வரை இடம்பிடித்த, 133 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், 20 ஆம் தேதி காலை 9 மணிக்கு தரவரிசைப் பட்டியலில், 634 முதல் 785 ஆவது இடம் வரை பிடித்த மாணவர்கள், கட்-ஆப் மதிப்பெண் 122 வரை பெற்றவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 11 மணிக்கு தரவரிசைப் பட்டியில் 786 ஆவது இடம் முதல் 886 வரை இடம் பிடித்த, 116 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மதியம் 2 மணிக்கு தரவரிசைப்பட்டியலில் 887 ஆவது இடம் முதல் 951 வரை இடம் பிடித்த, கட்-ஆப் மதிப்பெண்கள் 113 வரை பெற்ற மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவப்படிப்பிற்கான இந்த கலந்தாய்வு, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. மாணவர்கள் தங்களுக்கான அனுமதிக் கடித்தை https://tnhealth.tn.gov.in மற்றும் http://www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

மாணவர்களுக்கு தனியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்படமாட்டாது. மாணவர்கள் கலந்தாய்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வர வேண்டும். கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் உண்மை சான்றிதழ் இல்லாமல் வந்தால் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மாணவர்கள், நீட் தேர்வு 2020 ஹால் டிக்கெட் மற்றும் மதிப்பெண் சான்றிதழ், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ். 11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளியில் படித்தற்கான மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் பெற்ற சான்றிதழ், கடைசியாக படித்த பள்ளியின் மாற்று சான்றிதழ் அல்லது தற்பொழுது படிக்கும் கல்வி நிறுவனத்தின் உண்மை சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவை கொண்டு வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

Last Updated : Nov 16, 2020, 10:25 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details