சென்னை:நீட் தேர்வு முடிவுகள் வெளியானபிறகு பொறியியல் கலந்தாய்வை நடத்துவதற்கு தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு முடிவு செய்துள்ளதால் பொறியியல் கலந்தாய்வை, ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, வரும் ஆக.16 ஆம் தேதிக்குப் பதிலாக மற்றொரு தேதிக்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன், பொறியியல் கலந்தாய்வை நடத்தினால் முன்னணி கல்லூரிகளில் பொறியியல் இடங்களைத்தேர்ந்தெடுக்கும் மாணவர்கள், நீட் முடிவுக்கு பின்னர் மருத்துவப்படிப்பிற்கு, பொறியியல் இடங்களை விடுத்து வெளியேறுவதால் நீட் முடிவுக்கு பிறகே பொறியியல் கலந்தாய்வு நடப்பாண்டில் நடத்தப்படும்.
பி.இ., பி.டெக் பொறியியல் படிப்பில் 2022-23ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பாெறியியல் மாணவர் சேர்க்கை குழுவால் கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 27ஆம் தேதி வரையில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 905 மாணவர்கள் விண்ணப்பங்களைப்பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 67ஆயிரத்து 387 மாணவர்கள் கட்டணங்களை செலுத்தி உள்ளனர். 1 லட்சத்து 56 ஆயிரத்து 214 மாணவர்கள் சான்றிதழ்களை முழுவதுமாகப் பதிவேற்றம் செய்துள்ளனர்.