தமிழ்நாடு

tamil nadu

இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டம்: தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு!

By

Published : Apr 8, 2022, 10:50 AM IST

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர ஏப்ரல் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு!
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு!

சென்னை:இதுகுறித்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "2022-2023ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவர்களை சேர்க்கலாம். இதற்காக பள்ளியில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 25 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

சிறுபான்மையற்ற சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில், மாணவர் சேர்க்கை பற்றி பெற்றோர் அறியும் வகையில், நுழைவு வாயிலில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட வேண்டும். எல்கேஜி அல்லது முதல் வகுப்பிற்கு அருகாமையிடம் என்பது ஒரு கிலோ மீட்டர் ஆகும். மாவட்டக் கல்வி அலுவலகங்களிலும் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

தனியார் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களின் விபரங்களை ஏப்ரல் 13ஆம் தேதி அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். இதற்காக ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தின் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து விளம்பரப் பலகை பள்ளிகளில் வைக்கப்பட வேண்டும்" எனக் கடிதத்தில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'எஸ்.ஐ. தேர்வுக்கு விண்ணப்பிக்க எக்ஸ்ட்ரா 10 நாள்கள் அவகாசம்!'

ABOUT THE AUTHOR

...view details