சென்னை வியாசர்பாடி பெரியார் நகரை சேர்ந்தவர் பிரபாகரன்(27). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சான் பிளாஸ்டிங் என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் நேற்று நிறுவனத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது தந்தை ஆனந்தன், பிரபாகரனை தேடி நிறுவனத்திற்கு சென்று பார்த்த போது நிறுவனம் பூட்டியிருந்தது.
இதில் சந்தேகமடைந்த அவர், கதவை உடைத்து உள்ளே சென்ற பார்த்த போது, பிரபாகரன் படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆனந்தன், உடனே இது குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.