தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வரும் 17ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது - வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை: வடகிழக்குப் பருவமழை வருகிற 17ஆம் தேதி தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

meteorological-center

By

Published : Oct 15, 2019, 7:34 PM IST

Updated : Oct 16, 2019, 2:34 AM IST

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய புவியரசன், "தென்மேற்குப் பருவமழை படிப்படியாக விலக தொடங்கிவிட்டது. அடுத்த 48 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக விலகக்கூடும். அதேசமயம் வரும் 17ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, அதனை ஒட்டியுள்ள தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, கர்நாடகாவின் தென்பகுதி, கேரளா ஆகிய இடங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.

வானிலை ஆய்வு மைய இயக்குநர் செய்தியாளர் சந்திப்பு

அடுத்த 48 மணிநேரத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள், வடக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. வரும் 17, 18ஆம் தேதிகளில் மன்னார் வளைகுடா, குமரிக்கடல், லட்சத்தீவுப் பகுதிகளில் சூறைக்காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் கனமழை - பள்ளிகளுக்கு விடுமுறை!

Last Updated : Oct 16, 2019, 2:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details