தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அடையாள அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கரோனா நிவாரண உதவித்தொகை ' - High Court Lawer

மூன்றாம் பாலினத்தவர் நல வாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கும் கரோனா நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அடையாள அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கரோனா நிவாரண உதவித்தொகை வழங்கப்படும்
அடையாள அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கரோனா நிவாரண உதவித்தொகை வழங்கப்படும்

By

Published : Jun 18, 2021, 3:32 PM IST

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 4,000 வழங்கப்படுகிறது. ரேஷன் அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இந்த நிவாரண உதவி வழங்க உத்தரவிட வேண்டும் என, மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ்பானு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி சுப்பையா அமர்வில் இன்று (ஜூன் 18) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முக சுந்தரம், "அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படும். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 11ஆயிரத்து,449 மூன்றாம் பாலினத்தவர்களில், ரேஷன் அட்டை வைத்துள்ள இரண்டாயிரத்து,956 பேருக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள எட்டாயிரத்து,493 பேருக்கும் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும்" என தெரிவித்தார்.

இதை பதிவுசெய்த நீதிபதிகள், “அரசின் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தவறாக பயன்படுத்தகூடாது என்பதால், உண்மையான மூன்றாம் பாலினத்தவர்களின் பெயர், முகவரியை அளிக்க வேண்டும்" மேலும், உதவித்தொகை பெறாமல் விடுபட்டவர்கள் குறித்து தெரிவிக்க ஏதுவாக வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது" என உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details