மேற்கு முகப்பேர், எபநேசர் அவென்யூவில் நேற்று மாலை கர்நாடக மாநிலம் பெங்களூரு பதிவெண் கொண்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் வாகனம் மாலை ஆறு மணியிலிருந்து நின்று கொண்டிருந்தது. காரின் அனைத்து கண்ணாடிகளும் கறுப்பு தாள்களால் மறைக்கப்பட்டு இருந்ததாலும் சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் நின்றிருந்தாலும் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவலளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நொளம்பூர் காவல் துறையினர், எபநேசர் அவென்யூவில் சொகுசு வாகனமான டொயோட்டா ஃபார்ச்சூனர் தப்பிச் செல்லாதவாறு சாலையின் குறுக்கே தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு சோதனையிட இறங்கினர். அப்போது காவல் துறையினர் எதிர்பார்க்காத வண்ணம் அவர்களின் வாகனத்தை டொயோட்டா ஃபார்ச்சூனர் இடித்துத் தள்ளிவிட்டுத் தப்பிச் சென்றது.