சென்னை: திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் மற்றும் முக்கிய தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடுத் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அழகிரி, "2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் ராகுல் காந்தி பரப்புரை செய்யும் இடங்களில், திமுக தலைவர்களும் பரப்புரை செய்ய தினேஷ் குண்டுராவ் அழைப்பு விடுத்தார்.