தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'பொங்கல் நாள்களில் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் வர தடை'

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

By

Published : Jan 12, 2021, 2:57 PM IST

Updated : Jan 12, 2021, 4:08 PM IST

14:53 January 12

பொங்கல் விடுமுறை நாள்களில், அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் பொதுமக்கள் வர தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. அரசு நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில் பொங்கல் விழா நெருங்கிவிட்டது. அந்நாள்களில், கடற்கரைகளில் அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூட வாய்ப்புள்ளதால், தொற்று பரவும் அபாயம் உள்ளது. அதனை தடுக்கும் வகையில், மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் (16.1.2021) பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகை விடுமுறை நாள்களில்(15.1.2021, 16.1.2021 மற்றும் 17.1.2021) வண்டலுர் அண்ணா உயிரியியல் பூங்கா, மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள், சென்னையில் உள்ள கிண்டி தேசிய பூங்கா, மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

எனவே பொதுமக்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பொங்கல் பரிசு பணத்தில் ஆன்லைன் ரம்மி - தோற்றதால் கல்லூரி மாணவர் தற்கொலை!

Last Updated : Jan 12, 2021, 4:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details