தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் குழு கூட்டத்தில் சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் முதன்மை செயலர் உள்ளிட்ட அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்புக்கு பின்னர் மருத்துவக் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் பேருக்கு கரோனா சோதனை நடைபெறுகிறது. முக்கிய பகுதிகளில், “பீவர் கிளினீக்” அமைத்து சோதனை நடைபெறுகிறது.
முதலில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியேவை லோசானதாக தோன்றும். ஆனால் அவர்கள் சமூகத்துடன் சமூகமாக கலந்தால் பாதிப்பு அதிகமாகும்.
ஆகவே அவர்கள் பீவர் கிளினீக்கில் சோதனை செய்துகொள்வது நல்லது. மேலும் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சுவையிழப்பு ஒரு முக்கியமான கரோனா அறிகுறியாகும். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று கரோனா சோதனை நடத்துகின்றனர்.
கிராமங்களில் சுகாதார ஊழியர்கள் கரோனா சோதனை நடத்தி வருகின்றனர். கரோனா எண்ணிக்கை அதிகரிப்பதால் பலருக்கும் பயம் ஏற்பட்டுள்ளது. சோதனை அதிகரிப்பதால், பாதிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இது குறித்து மக்கள் பயம் கொள்ள வேண்டாம்.