தேமுதிக கொடி நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று, கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ”சசிகலாவை சென்று சந்திக்கும் திட்டம் ஏதுமில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் தேமுதிக நிர்வாகிகளும் இனி பங்கேற்பார்கள். கூட்டணி பற்றி தேமுதிகவிடம் கேட்பதைவிட அதிமுகவிடம் கேட்பது தான் சரியாக இருக்கும்.
தேமுதிக தனித்துப் போட்டியிட்டாலும் 234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம். பாமகவுடனான அமைச்சர்கள் சந்திப்பு 20% இட ஒதுக்கீடு தொடர்பாகத்தானே தவிர, கூட்டணி தொடர்பாக அல்ல. மேலும், எந்தக் கட்சியிலும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறவில்லை. தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால் உடனடியாக கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்க வேண்டும்.