ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் கடும் மழை காரணமாக பெரிய வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் அதன் விலை அதிகரித்து ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல் சந்தையில் விற்கப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ 45 ரூபாய்க்கு பெரிய வெங்காய விற்பனையை தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தட்டுப்பாடின்றி மக்கள் வெங்காயத்தை வாங்கிச் செல்லலாம் எனக் கூறினார்.
இதையடுத்து நேற்று(அக்.22) தேனாம்பேட்டையில் உள்ள பண்ணை பசுமைக் கடையில், மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று பெரிய வெங்காயத்தை, கிலோ 45 ரூபாய்க்கு வாங்கிச்சென்றனர். ஒருவருக்கு இரண்டு கிலோ மட்டுமே வழங்கப்பட்ட வெங்காயத்தை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாங்கினர்.