சென்னைமாநகராட்சியின் 117ஆவது வார்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக வேட்பாளர் போஸ்டர் ஒட்டியுள்ளதாக கூறி, அதிமுக வேட்பாளர் ஆறுமுகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத் சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு இன்று(பிப்.16) வந்தது.
அப்போது நீதிபதிகள் தேர்தலை முன்னிட்டு போஸ்டர்கள் ஒட்ட யாருக்கும் அனுமதிக்கயளிக்க கூடாது. விதிமுறைகளை மீறி போஸ்டர்கள் ஒட்டியவோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். முன்னதாக ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றி, அதற்கான செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.