வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை (நவ.25) காலை கரையைக் கடக்கும் எனவும், அதி தீவிர புயலாக மாறக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக கடலோர மாவட்டங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம், ”இந்தப் புயலானது தற்போது சென்னைக்கு 400 கி.மீ., தூரத்திலும், 300 கி.மீ., கிழக்கு-தென்கிழக்கே கடலூரிலுருந்தும், 350 கி.மீ., தென்கிழக்கு பகுதியிலும் மையம் கொண்டுள்ளது.
அதனடிப்படையில், அடுத்த 5 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறக்கூடும். இதுவரை 130 கிமீ வேகம் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது 145 கிமீ வேகத்தில் கரையை கடக்கும்" என அறிவித்துள்ளது. மேலும் இந்த புயல் அதி தீவிர புயலாக நாளை மாமல்லபுரம் அருகே கரையை கடக்க உள்ளது. அத்துடன் புதுச்சேரி, ஆந்திராவின் சில பகுதிகளிலும் கடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:”இது சும்மா ட்ரைலர்தான்...மெயின் பிக்சர் இனிமேதான்” - நிவர் புயல் குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான்