நிவர் புயலானது இன்று (நவ. 25) கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்காக காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள 94981 81239என்ற எண்ணை சென்னை காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
மரம் விழுந்து போக்குவரத்து இடையூறு, மின்கம்பி அறுந்து விழுதல், மழை காரணமாக மின்சார பழுதுகள் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உதவி எண்ணுக்கு வரும் அழைப்புகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.