சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று (மார்ச் 22) வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:
"ஒரு உழவனாக பாஜகவின் தேர்தல் அறிக்கையை வரவேற்கிறேன். பயோ எத்தனால் பயன்பாட்டை அதிகரிப்பதே எங்கள் நோக்கம். நாட்டு மக்களின் எரிபொருள் தேவையை உழவர்களே பூர்த்திசெய்யும் நிலை உருவாகப்போகிறது. உழவர்களுக்கு முன்னுரிமை வழங்கியதற்காகத் தமிழ்நாட்டு பாஜகவுக்குப் பாராட்டுகள்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உரை அரிசி, நெல், கரும்பு உள்ளிட்ட வேளாண் பொருள்களிலிருந்து பயோ எத்தனாலை உருவாக்க வேண்டும். இந்தியா - இலங்கை இடையே பல பிரச்சினைகள் உள்ளன. 16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சாகர் மாலா திட்டத்துக்கு 6 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது.
சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையில் ஈரடுக்கு மேம்பாலம் வர உள்ளது. சாகர் மாலா திட்டம் நிறைவேறினால் இந்திய எல்லையிலேயே மீனவர்கள் மீன்பிடித்துக்கொள்ளலாம். 100 நாட்டிக்கல் மைல் வரை தமிழ்நாட்டு மீனவர்கள் சென்று மீன்பிடிக்கலாம்" என்றார்.
இதையும் படிங்க:பரப்புரைக்காக... மோடி, அமித் ஷா, நட்டா, மத்திய அமைச்சர்கள் தமிழ்நாடு வருகை