தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'நீண்ட சமாதி நிலையில் இருந்து வந்துள்ளேன்' - நித்தியானந்தா நேரலையில் தோன்றி விளக்கம்

சமாதி நிலையில் இருப்பதாக கூறி வந்த நித்தியானந்தா மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் நேரலையில் தோன்றினார்.

இறந்ததாக் கூறப்பட்ட நிலையில் பேஸ்புக் நேரலையில் தோன்றிய நித்தியானந்தா
இறந்ததாக் கூறப்பட்ட நிலையில் பேஸ்புக் நேரலையில் தோன்றிய நித்தியானந்தா

By

Published : Jul 14, 2022, 7:35 PM IST

Updated : Jul 14, 2022, 7:57 PM IST

நித்தியானந்தா பல சர்ச்சை வழக்குகளில் சிக்கியுள்ளார். இந்நிலையில் காவல்துறையிடமிருந்து தப்பி தலைமறைவாகி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தென் அமெரிக்கா கண்டத்தில் ஒரு தீவினை விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. அதற்கு கைலாசா என பெயரிட்டு தனி நாடு என அவர் அறிவித்தார்.

அங்கு இருந்து பல அறிவுரை, தரிசனம் என பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

நித்தியானந்தா நேரலையில் தோன்றி விளக்கம்

அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது. இப்படிபட்ட விறுவிறுப்பான நித்தியானந்தாவின் வீடியோக்கள் கடந்த சில மாதங்களாக வெளியாகவில்லை. நித்தியானந்தா இறந்ததாகவும், ஜீவ சமாதி அடந்ததாகவும் பல செய்திகள் வெளியாகின. தொடர்ந்து அவர் குறித்த பொய்யான தகவல்கள் பரவின.

இதனையடுத்து தான் உடல்நிலை சரியில்லாததால் சமாதி நிலையில் இருப்பதாகவும், விரைவில் பக்தர்கள் முன் தோன்றுவேன் எனவும் சமூக வலைதளங்களில் நித்தியானந்தா விளக்கமளித்தார். இந்நிலையில் நேற்று (ஜூலை 13) உலகம் முழுவதும் இருக்கும் பல ஆன்மீக குருக்களுக்கான புத்த பூர்ணிமா கொண்டாடப்பட்டது.

இந்த சிறப்பு பூஜைக்காக நித்தியானந்தா அவரது பக்தர்களுக்காக சிறப்பு நேரலையில் தரிசனம் செய்ய உள்ளதாக அவரது முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று நேரையில் நித்தியானந்தா நேரலையில் தோன்றினார்.

அப்போது பேசிய அவர், இந்த மூன்று மாத சமாதி நிலைக்கு பின் நான் முழுவதுமாக அப்கிரேட் ஆகியுள்ளேன். இந்த மூன்று மாத சமாதி நிலைக்கு பிறகு எனக்கு எல்லாமே புதிதாக தெரிகிறது. இந்த மூன்று மாத சமாதி நிலை இந்த மொத்த யூனிவர்சிற்கும் தற்போது நடைபெறும் நல்ல விஷயம் ஆகும். இதற்கன ரிசல்ட் இன்னும் சில நாட்களில் நிகழவிருக்கும் புத்தம்புது தொடக்கத்தின் பின் அனைவருக்கும் தெரியவரும்.

இனி வரும் நாட்கள் எனக்கும் கைலாசாவிற்கும் ஒரு புதிய தொடக்கமாக அமையவுள்ளது. உங்களிடம் பகிர்ந்துகொள்ள இன்னும் நிறைய உள்ளது, இனி உங்களுடன் தினமும் தொடர்ந்து பேசுகிறேன். அதன்படி முதல் நாளான இன்று பல வித்ததிலும் கைலாயத்திற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:விழுப்புரத்தில் நித்தியானந்தாவிற்கு பிரம்மாண்ட சிலை - உருவாகிறதா மினி கைலாசா ?

Last Updated : Jul 14, 2022, 7:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details