சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்குப் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இது தர்மசங்கடமான கேள்வி. இது குறித்து நான் என்னதான் பேசினாலும், குற்றத்தை மற்றவர்கள் மீது சுமத்துவதைப்போல் இருக்கும், கேள்விக்குப் பதிலளிக்காததைப் போல் இருக்கும்.
இது குறித்து மத்திய மாநில அரசுகள் இணைந்து பேச வேண்டும். இதனைச் சரிசெய்ய வேண்டும். ஒருவேளை மத்திய அரசு வரியை குறைந்தாலும், மாநில அரசுகள் வரியை உயர்த்த வாய்ப்புள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தால் இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட வேண்டும்.