தமிழ்நாடு முழுவதிலும் கோடை விடுமுறைக்குப் பின் கடந்த திங்கட்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட்டன. அச்சமயத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி பெசன்ட் நகர் - ஐசிஎஃப் தடத்தில் சென்ற பேருந்தின் மீது ஏறி பஸ் டே கொண்டாடினர். பின்னர் பஸ் டே கொண்டாடிய மாணவர்கள் மீது கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
'பஸ் டே' கொண்டாட்டம் - பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் இடைநீக்கம்! - Bus day
சென்னை: ’பஸ் டே’ கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேரை இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Bus day
இந்நிலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 9 மாணவர்களையும் இடைநீக்கம் செய்வதாக கல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அந்த மாணவர்கள் அனுமதியின்றி கல்லூரிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.