சென்னை:மலைச்சரிவு காரணமாக நீலகிரி மலை ரயில் நேற்று உதகமண்டலத்திலிருந்து ஹில்கிரோவ் வரை மட்டுமே இயக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (ஜன.10) மேட்டுப்பாளையத்திலிருந்து உதகமண்டலம் மற்றும் உதகமண்டலத்திலிருந்து மேட்டுப்பாளையம் ஆகிய ரயில் சேவைகளும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.