தெலங்கானாவில் திஷா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கடந்த 6ஆம் தேதி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி குண்டுகளின் மூலம் நீதி வழங்கப்பட்டதற்காக மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதேநேரத்தில், நீதி வழங்கப்பட்ட வழிமுறை சரியானது அல்ல என்ற வாதத்தை சிலர் முன்வைக்கிறார்கள். இந்நிலையில், இவ்விஷயத்தில் தேசிய மனித உரிமை ஆணையமும், உச்சநீதிமன்றமும் எத்தகைய வழிகாட்டல்களை வழங்கி இருக்கின்றன என்பதை தற்போது பார்ப்போம்.
என்.எச்.ஆர்.சி-யின் வழிகாட்டல்கள்:
கடந்த 1997ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிகழ்ந்த போலி என்கவுன்ட்டர்கள் குறித்து பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து, என்.எச்.ஆர்.சி-யின் அப்போதைய தலைவர் வெங்கடாச்சலய்யா, அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், என்கவுன்ட்டரின்போது காவல் துறை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அவர் வலியுறுத்தி இருந்தார். பின்னர் பல்வேறு வழிகாட்டல்களை முறைப்படுத்தி பட்டியலிட்ட என்.எச்.ஆர்.சி, அந்த வழிகாட்டல்களுக்கு மத்திய – மாநில அரசுகள் கட்டுப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.
அந்த வழிகாட்டல்கள் குறித்து தற்போது பார்ப்போம்:
என்கவுன்ட்டர் குறித்த தகவல் கிடைக்கப் பெற்றதும் காவல் துறையினர் அதனை சரியான பதிவேட்டில் பதிவிட வேண்டும். என்கவுன்ட்டர் நிகழ்ந்த சூழ்நிலை குறித்தும் அதனை நிகழ்த்திய காவல் துறையினர் குறித்தும் சுதந்திரமான பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். என்கவுன்ட்டர் நடந்த காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் துறை அதிகாரியே என்கவுன்ட்டரை நடத்தி இருந்தால், அது குறித்த விசாரணையை சிஐடி போன்ற சுதந்திரமான ஒரு விசாரணை நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
விசாரணையில் காவல்துறை அதிகாரிகள் குற்றம் இழைத்ததாக நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது பொருத்தமான ஐபிசி சட்டப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். காவல்துறை நடவடிக்கை காரணமாக உயிரிழப்பு ஏற்படுமானால் அதுகுறித்து 3 மாதங்களுக்குள் மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடத்தப்பட வேண்டும். காவல்துறை நடவடிக்கை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டால் அதுகுறித்து 48 மணி நேரத்திற்குள் என்.எச்.ஆர்.சி.க்கு தெரியப்படுத்த வேண்டும்.
உடற்கூறாய்வு அறிக்கை, விசாரணை அறிக்கை, மாஜிஸ்ட்ரேட் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டவை ஆகிய தகவல்களைக் கொண்ட இரண்டாவது அறிக்கை 3 மாதங்களுக்குள் அனுப்பப்பட வேண்டும்.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள்: